[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 20 Oct, 2018 08:45 am
  • அ+ அ-

மேஷம்: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புண்ணியத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

ரிஷபம்: மன உளைச்சல் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தந்தைவழி உறவினரால் ஆதாயம், மகிழ்ச்சியுண்டு. வீண் செலவுகள் குறையும். கலகலப்பான சூழல் நிலவும்.

மிதுனம்: திறமையுடன் செயல்பட்டு கடினமான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். மனக்குழப்பம் நீங்கும். வேற்று மதத்தினரால் நன்மை உண்டு. தந்தையின் உடல்நிலை பாதிக்கும். 

கடகம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மற்றவருக்கு உதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள். வாக்குறுதியை போராடி நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு அதிகரிக்கும்.

கன்னி: அரசுக் காரியங்களில் இருந்துவந்த தடை விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணம் மகிழ்ச்சி தரும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் விரும்பி வருவார்கள்.

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் இருந்துவந்த தேக்க நிலை மாறும். திடீர் பயணம் உண்டு.

விருச்சிகம்: வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. புது வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். பணவரவு உண்டு.

தனுசு: வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். விருந்தினர் வருகை உண்டு.

மகரம்: காரியங்களை சுறுசுறுப்புடன் நிறைவேற்றுவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆரோக்கியம் சீராகும். ஆடை, ஆபரணம் சேரும்.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். நெருங்கியவரிடம் மனக்குறைகளைச் சொல்லி ஆதங்கப்படுவீர்கள். யாரையும் மனம் நோகும்படி பேசாதீர்கள்.

மீனம்: பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் பிறக்கும். உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் தேவை. யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close