[X] Close

வார ராசிபலன் அக்டோபர் 18 முதல் 24-ஆம் தேதி வரை (துலாம் முதல் மீனம் வரை)


vaara-rasipalan

  • kamadenu
  • Posted: 19 Oct, 2018 09:16 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் சஞ்சாரம் செய்யும் ராசிநாதன் சுக்கிரனால் எடுத்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். வெளியூர், வெளிநாட்டுப் பயணம் செல்ல நேரலாம். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். ஆரோக்கியத்தில் மேம்பாடு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சல், ஆர்டர் கிடைப்பதில் தாமதம் காணப்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். அதிக உழைப்பின் பேரில் வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்து செல்வதால் எல்லா பிரச்சினைகளும் சரியாகும்.

பெண்களுக்கு, எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். கலைத் துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் ஏற்படும். நீண்ட நாட்களாக சுணங்கிக் கிடந்த காரியங்கள் நல்லமுறையில் நடைபெறும். அரசியல்வாதிகளுக்கு, எதையும் ஆரம்பிக்கும் போது தீர ஆலோசித்துச் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு, கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 3, 6

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வரத் தடைகள் அகலும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் குரு இருப்பதால் நல்ல பலன்கள் உண்டாகும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்விகச் சொத்துக்களில் இருந்த பிரச்சினைகளில் சாதகமான நிலை காணப்படும். தானதர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூரப் பயணங்கள் செல்ல நேரலாம். தொழில், வியாபாரத்தில் நிதானமான போக்கு காணப்படும். உத்தியோகத்தில் கவனமாகப் பணிகளைச் செய்ய வேண்டும் . சிலருக்கு இடமாற்றம், உத்தியோக மாற்றம் உண்டாகலாம்.

கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதிருப்தியை அளிப்பதாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாகப் பேச வேண்டும். பெண்களுக்கு, கவலை நீங்கும். கலைத் துறையினருக்கு, கௌரவம் உயரும். வழக்குகள் சாதகமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, தீவிர முயற்சிகளால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு, தடைகளைத் தாண்டி கல்வி முயற்சிகள் வெற்றி பெறும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 3, 6, 9

பரிகாரம்:  முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்குகளில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டுப் பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் சரியாகப் பணிகளை முடிக்க வேண்டுமென்ற கவலை உண்டாகும்.

சக ஊழியர்களிடம் கவனமாகப் பேச வேண்டும். குடும்பத்தில் வீண்பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. சுபச்செலவு ஏற்படும். கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வரலாம். பிள்ளைகளின் செயல்பாட்டில் கவனம் தேவை. பெண்களுக்கு, தேவையற்ற சில காரியங்களைச் செய்ய வேண்டி இருந்தாலும் அதனால் நன்மை உண்டாகும். கலைத் துறையினருக்கு, நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் தொடர்பாக தீர ஆலோசனை செய்ய வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். மாணவர்களுக்கு, விளையாட்டுப் போட்டிகளில் திறமை வெளிப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: மஞ்சள்

எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானுக்கு முல்லை மலர் சாற்றி நெற் தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் செவ்வாய் இருப்பதால் சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். பணவரவு சீராக இருக்கும். வேலைப்பளு காரணமாக நேரம் தவறி உணவு  உண்ண வேண்டி இருக்கும். அக்கம்பக்கத்தில் சில்லறைச் சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கௌரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம். தொழில், வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மேலதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்று ஏற்படலாம். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு வீண் அலைச்சல், வேலைப்பளு அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்களால் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்தரம் உயரும். மாணவர்களுக்கு, கிண்டல் கேலிப்பேச்சில் ஈடுபடும்போது கவனம் அவசியம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: நீலம் எண்கள்: 3, 6 பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வர குடும்ப கஷ்டங்கள் நீங்கும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் தனஸ்தானம் குரு பார்வை பெறுவதால் தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் சிக்கல் தீரும். எதிர்த்துச் செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய்நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேலதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும்.

குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும். பெண்களுக்கு, எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு, கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். அரசியல்வாதிகள் எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. மாணவர்களுக்கு, சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 3, 9

பரிகாரம்:  வியாழக்கிழமை ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசி ராசிநாதன் குரு பார்வை பெறுவதால் தேவையற்ற மன சஞ்சலம் நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்வதனால் வீண் பிரச்சினை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்குக்கும் கோபம் வரலாம். கவனம் தேவை. பணத்தேவை பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருக்க வேண்டும்.

பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு வீண் செலவைத் தடுக்க திட்டமிட்டு செயல்பட வேண்டும். கலைத் துறையினருக்கு, எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். அரசியல்வாதிகளுக்கு எந்த வாக்குறுதியையும் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு,  சக மாணவர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: மஞ்சள், சிவப்பு

எண்கள்: 1, 3

பரிகாரம்: சித்தர்களை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close