[X] Close

நவராத்திரி - இப்படியும் ஒரு கதை!


navarathiri-spl

  • வி.ராம்ஜி
  • Posted: 17 Oct, 2018 14:14 pm
  • அ+ அ-

நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜை செய்ய இயலாதவர்கள், சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினாலே போதுமானது. அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கப் பெறலாம்!

  விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை மரத்தை வெட்டுவது கோயில்களில் வழக்கமாக உள்ளது. ஒருமுறை பண்டாசுரனுடன், பார்வதி தேவி போர் புரிந்தார். பலமுறை போரிட்டும், பார்வதி தேவியால், பண்டாசுரனை அழிக்க முடியவில்லை.

இதையடுத்து பார்வதி தேவி, சிவபெருமானை வேண்டினார். அப்போது சிவபெருமான், விஜயதசமியில் போரிடும்படி அருளினார். அதன்படி பார்வதியும், விஜயதசமி தினத்தில்,  பண்டாசுரனுடன் போரிட்டார்.

  அப்போது போரில் தோல்வியுற்ற பண்டாசுரன், வன்னி மரத்தில் புகுந்து ஒளிந்துகொண்டான். இதனை அறிந்த பார்வதிதேவி, வன்னி மரத்தை வெட்டி, அதில் ஒளிந்திருந்த அசுரனை சம்ஹாரம் செய்தார். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என மருவியது.  பண்டாசுரனை அழித்த மாலை வேளையில், இதனை நினைவுபடுத்தும் விதமாக வாழை மரத்தை வெட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close