[X] Close

கல்விக்கடவுள் - நைவேத்தியம் - மலர்கள்!


saraswathi-pooja

சரஸ்வதி தேவி

  • kamadenu
  • Posted: 17 Oct, 2018 13:59 pm
  • அ+ அ-

 நவராத்திரி விழாவின் நிறைவான வைபவமாக சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் 9-ம் நாள் விழா சரஸ்வதி பூஜை. அன்றைய தினம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவார்கள்.

  சரஸ்வதிதேவி வழிபாட்டுக்கு முன்னதாக, வழிபாடு செய்யும் இடத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். சந்தனம் தெளித்து குங்குமம் இட வேண்டும். சரஸ்வதியின் படத்திற்கும், படைக்கப்பட வேண்டிய பொருட்களுக்கும் சந்தனம் தெளித்து, குங்குமம் இடுவது அவசியம்.

  கல்விக்கு அதிபதியான சரஸ்வதி அன்னையின், அருள் பார்வையில் படும்படியாக புத்தகங்களை வைத்து முன்பாக வாழை இலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்ட நைவேத்தியங்களை வைக்க வேண்டும்.

  சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை சரஸ்வதி தேவிக்கு நிவேதனமாக படைக்கலாம். அவல், பொரி, கடலை மற்றும் பழங்களும் வைக்க வேண்டும்,

   செம்பருத்தி, ரோஜா, வெண் தாமரை போன்றவை சரஸ்வதி தேவிக்கு உகந்த மலர்கள். இவற்றை மாலையாகத் தொடுத்து கல்வியின் அதிபதிக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும்.

  அனைத்துக்கும் ஸ்ரீவிநாயகரே முழுமையானவர். முதலானவர். மூலப் பரம்பொருள். எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதனை சரஸ்வதி பூஜையில் வைப்பதுடன்,

சுக்லாம் பரதரம் விஷ்ணும்

சஸிவர்ணம் சதுர்புஜம்!

ப்ரசந்த வதனம் த்யாயேத் சர்வ

விக்நோப சாந்தயே’

என்று கூறி விநாயகரை வணங்கிய பின்னரே, சரஸ்வதிக்கான பூஜையை தொடங்க வேண்டும். சரஸ்வதி பூஜையின் போது ‘துர்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம’ என்று கூறி பூஜையை தொடங்குவது நன்மைகளை வாரிவழங்கும்! பூஜையில் கலசம் வைத்தும் கலைமகளை வழிபடலாம். கலசம் வைத்து அதில் அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது உறுதி. 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close