[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 17 Oct, 2018 09:19 am
  • அ+ அ-

மேஷம்: மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலைகள் தடையின்றி முடியும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

ரிஷபம்: பேச்சுத் திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். உடல் நலம் சீராகும். 

மிதுனம்: ஒரே நாளில் பல வேலைகளைப் பார்ப்பீர்கள். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேசாதீர்கள். மற்றவர் பிரச்சினையில் தலையிடுவதால் வீண் பழி ஏற்படும்.

கடகம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த பிணக்குகள் மறையும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். பணவரவு உண்டு.

சிம்மம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உடன்பிறந்தவர்களின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனம் இனி சீராகும். ஆடை, ஆபரணம் சேரும்.

துலாம்: குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். விருந்தினர் வருகை உண்டு

விருச்சிகம்: காரியங்களை முடிப்பதிலிருந்த தடை, தாமதங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சோம்பல், உடல் அசதி நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பயணத்தால் ஆதாயம் உண்டு.

தனுசு: ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து எளிமையாக வாழ விரும்புவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சகோதரருடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும்.

மகரம்: முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. அடுத்தவரைக் குறைகூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்வது நல்லது. செலவினம் அதிகரிக்கும்.

கும்பம்: பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். திடீர் பயணம் உண்டு.

மீனம்: கணவன் - மனைவிக்குள்  மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close