[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 16 Oct, 2018 09:29 am
  • அ+ அ-

மேஷம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் அதரவு கிட்டும். விருந்தினர் வருகை உண்டு.

ரிஷபம்: குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கடன் வாங்க வேண்டியது வரும். திடீர் பயணம் உண்டு.

மிதுனம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். ஆடை, ஆபரணம் சேரும்.

கடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசு வகையில் அனுகூலம் உண்டு.

சிம்மம்: பிள்ளைகளின் பொறுப்புணர்வைப் பாராட்டுவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

கன்னி: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள்.

துலாம்: புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நல்ல நண்பர்களைச் சந்திப்பீர்கள். பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.

விருச்சிகம்: சொந்தபந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். மனநிறைவுடன் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

தனுசு: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். நண்பர்கள், உறவினர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகள் தாமதமாக முடியும்.

மகரம்: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். பழைய கடனைத் தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

கும்பம்: குடும்பத்தில் அமைதி நிலவும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் சந்திப்பு நிகழும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மீனம்: விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் அதிகரிக்கும். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close