[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 15 Oct, 2018 09:13 am
  • அ+ அ-

மேஷம்: தடைபட்டுவந்த காரியங்கள் எல்லாம் இன்று சுமுகமாக முடியும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும்.
**
ரிஷபம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.
**
மிதுனம்: மன நிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். சொந்த பந்தங்கள் வருகையால் வீடு களைகட்டும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
**
கடகம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். நட்பு வட்டாரம் விரிவடையும். கடன் பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். தம்பதியர் இடையே அன்யோன்யம் கூடும்.
**
சிம்மம்: பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தினரிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களை சந்திப்பதால் ஆதாயம் உண்டு.
**
கன்னி: நம்பிக்கை, உற்சாகம் பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். பேச்சில் நிதானம் தேவை.
**
துலாம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உறவினர்களால் மனநிம்மதி கிடைக்கும். பணவரவு உயரும்.
**
விருச்சிகம்: எப்பாடுபட்டாவது, சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். பணவரவு, பொருள் வரவு கூடும்.
**
தனுசு: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளி வட்டாரத்தில் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
**
மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல்நிலை சீராக இருக்கும். நண்பர்கள், உறவினர்களின் வருகை உண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும்.
**
கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்கால வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
**
மீனம்: வீண் செலவுகளை தவிர்த்து, சேமிக்கத் தொடங்குவீர்கள். பேச்சில் நம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானம் உயரும். எதிலும் பொறுமை அவசியம்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close