[X] Close

சிவனாரும் ராமபிரானும் வழிபட்ட நவராத்திரி!


navarathiri-spl

  • வி.ராம்ஜி
  • Posted: 14 Oct, 2018 14:02 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

 நவராத்திரிப் பெருவிழாவை, கோலாகலமாக கொண்டாடி வருகிறோம். ஆனானப்பட்ட சிவபெருமானும் ஸ்ரீராமரும் கூட நவராத்திரி விரதம் அனுஷ்டித்து பலன்பெற்றிருக்கிறார்கள் என்கிறது புராணம்.

  ஈசன், திரிபுரத்தை எரித்த கதை அறிவோம்தானே.

இந்த திரிபுரங்களை எரித்து அழிப்பதற்கு முன்னதாக, நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மகாசக்தியைப் பூஜித்து, வழிபட்டு, வரம் பெற்றார். பின்னரே திரிபுரத்தை எரித்தார் என்கிறது புராணம். அதனால்தான் அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளெல்லாம் தூள்தூளாகப் பறந்தன என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

  சீதாதேவியை ராவணன் கடத்தியதை அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் ஒருகணம் தவித்து மருகினான் ஸ்ரீராமபிரான். அப்போது வந்த நாரத மாமுனி, சிவபெருமான் துவங்கி நவராத்திரி விரதம் அனுஷ்டித்து வரம் பெற்றவர்களைப் பட்டியலிட்டுச் சொன்னார். ‘நீயும் விரதமிரு ராமா. சீதாவை நிச்சயம் மீட்டு வருவாய்’ என அறிவுரை கூறினார்.

  இதைக் கேட்டு தெளிவு பெற்ற ராமபிரான், அங்கே பீடம் ஒன்றை உருவாக்கினார். பீடத்தில் தேவியை ஸ்தாபித்தார். ஒன்பது நாட்களும் கடும் விரதம் மேற்கொண்டு, தேவியை ஆத்மார்த்தமாகப் பூஜித்தார். பூஜையில் மகிழ்ந்த அம்பிகை, ராமரின் முன்னே வந்து தரிசனம் தந்தாள்.

  அதுமட்டுமா... என்ன வரம் வேண்டும் கேள் என்றாள்.

மனைவியைப் பிரிந்த துக்கம் சொன்னார். அவளைக் கடத்திச்  சென்றுவிட்டதைத் தெரிவித்தார். மனைவியை எப்படியேனும் மீட்கும் சக்தியை வழங்குங்கள் தாயே என மனமுருக வேண்டினார். அப்படியே ஆகட்டும் என்றாள்.

 இதையடுத்து ராம ராவண யுத்தம் நிகழ்ந்தது. ராவண அசுரனை அழித்தார். மனைவி சீதையை மீட்டார் என்கிறது புராணம்.

நவராத்திரி நாட்களில், எவரொருவர்  ஆத்மார்த்தமாக விரதம் மேற்கொண்டு அம்பாளைப் பிரார்த்தனை செய்கிறாரோ, அவர்களுக்கு அம்பிகை அனைத்து செல்வங்களையும் தந்தருள்வாள். தம்பதி ஒற்றுமையை மேம்படும். எதிரிகளை துவம்சமாக்குவள். எதிர்ப்புகள் எல்லாமே தவிடுபொடியாகும்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close