[X] Close

நவராத்திரி ஸ்பெஷல்: வாழ்வை உயர்த்தும் கன்யா பூஜை!


navarathiri-spl

  • kamadenu
  • Posted: 14 Oct, 2018 10:13 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

  மகாசக்தியைக் கொண்டாடும் ஒன்பது நாள் திருவிழாவான நவராத்திரிவிழாவில் பல  சடங்குகளும் சம்பிரதாயங்களும் பூஜைகளும் வழிபாடுகளும் உள்ளடங்கியிருக்கின்றன.  இவற்றில் முக்கியமானது கன்யா பூஜை.

 இந்த கன்யா பூஜையைச் செய்வதற்கு முன்னதாக, வீடு முழுவதும் சுத்தம் செய்யவேண்டும். வாசலிலும், பூஜையறையிலும் கோலமிட்டு, மாவிலைத் தோரணங்கள் கட்டுவார்கள். பத்துவயதுக்கு உட்பட்ட சிறுமிகளை அழைத்துச் செய்யும் பூஜையே கன்யா பூஜை. எனவே ஐந்து, ஏழு, ஒன்பது என ஒற்றைப்படை எண்ணிக்கையில் சிறுமியரை வரவழைத்து இந்தப் பூஜையைச் செய்யவேண்டும்.

 பூஜைக்கு அழைத்து வரப்பட்ட சிறுமியரே அப்போது மகாசக்திகள்.  அதாவது அவர்களே அம்பாள் அம்சம். அதாவது அம்பாளுக்குச் சமமானவர்கள். எனவே அவர்களை மணைப்பலகையில் அமர வைத்து, அவர்களுக்கு சந்தனமிட்டு, நலுங்கு வைத்து ஆராதித்து வரவேற்கவேண்டும்.

அவர்களுக்கு புத்தாடைகளும் அலங்காரப் பொருட்களும் வழங்கி மகிழ்விப்பார்கள். அந்த அம்பிகையரை, மகாசக்தியரை, சிறுமிகளை  வணங்கி நமஸ்கரிப்பார்கள். இந்தச் செயல்களால் உலகாளும் சக்தியான அன்னை குளிர்ந்து போவாள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். . நமக்கும் நம் குடும்பத்துக்கும் என்னென்ன தேவையோ அதையெல்லாம் தந்து மகிழ்வாள். இழந்ததையெல்லாம் அள்ளி வழங்குவாள்!

 கன்யா பூஜை செய்யும் இல்லம் மட்டுமின்றி, அந்தப் பூஜையில் கலந்துகொள்ளும் சிறுமியரின் இல்லங்களும் சுபிட்சம் பெறும். அந்தக் குழந்தைகள் கல்வியிலும் கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்!

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close