[X] Close

சஷ்டி... சக்திவேல்... சங்கடம் தீரும்!


sashti-murugan

  • வி.ராம்ஜி
  • Posted: 14 Oct, 2018 09:22 am
  • அ+ அ-

சஷ்டி நாளான இன்று, சக்திகுமரனை குமரனை வேண்டுவோம். நம் சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்து நம்மை சந்தோஷமாய் வாழச் செய்வான் கந்தகுமாரன்.

மாதந்தோறும் வருகிற சஷ்டியன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருக்கும் எண்ணற்ற முருக பக்தர்கள் உண்டு. விரதமிருந்து அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, கண் குளிர கந்தவேலனைத் தரிசித்துப் பிரார்த்தனை செவார்கள்.

இதோ... இன்று சஷ்டி தினம். அற்புதமான இந்த சஷ்டி நாளில், முருகக் கடவுளை நினைத்து மனதார பூஜியுங்கள். கந்தசஷ்டி கவசம் முதலானவற்றைப் பாராயணம் செய்து வழிபடுங்கள்.

முருகனுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. எனவே செம்பருத்தி, சிகப்பு ரோஜா, செவ்வரளி முதலான மலர்கள் சூட்டி, அழகன் முருகனை இன்னும் அழகுப்படுத்துங்கள். சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம் என ஏதேனும் இனிப்பு வகையை நைவேத்தியம் செய்து உங்கள் வேண்டுதல்களை மனதாரச் சொல்லிப் பிரார்த்தனை செய்யுங்கள்.

உங்கள் சங்கடங்கள் தீரும். கவலைகள் அகலும். துக்கங்கள் தவிடுபொடியாகும். வழக்கெல்லாம் வெற்றியாகும். காரியமெல்லம் ஜெயமாகும்!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close