[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 14 Oct, 2018 08:55 am
  • அ+ அ-

மேஷம்: அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு நிலவும். செரிமானக் கோளாறு வந்து செல்லும். மாலை முதல் மகிழ்ச்சிகரமான சூழல் அமையும்.

ரிஷபம்: இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உறவினர், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். ஆனால் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

மிதுனம்: உங்களின் நிர்வாகத் திறமை, ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கடகம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் மனோபலமும், வலிமையும் உண்டாகும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்: எதையும் சாதித்துவிடலாம் என்ற தைரியம் பெறுவீர்கள். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். பிரபலங்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.

கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மனஉறுதி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். புதிய யோசனைகள் உதயமாகும்.

துலாம்: தடைகள் பல வந்தாலும் தளராமல் சாதிக்க முற்படுவீர்கள். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அக்கம்பக்கத்தினர் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.

விருச்சிகம்: உங்கள் திறமை மீது அவ்வப்போது சந்தேகம் வரும். முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கையைக் கண்காணிப்பது நல்லது. திடீர் பயணம் உண்டு.

தனுசு: மனஇறுக்கம் வந்து செல்லும். நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். சொத்து தொடர்பான விவகாரங்களில் வழக்கறிஞரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது..

மகரம்: எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். பிள்ளைகளின் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்: கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்டுவதற்கான வரைபட திட்டத்துக்கு அனுமதி கிடைக்கும்.

மீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தொழிலதிபர்கள் அறிமுகமாவார்கள். தடைபட்டிருந்த வீடு கட்டும் பணியை மீண்டும் தொடர்வீர்கள். மனைவிவழி உறவினரால் ஆதாயம் உண்டு.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close