[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 13 Oct, 2018 08:16 am
  • அ+ அ-

மேஷம்: கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். சிலவற்றுக்கு உங்கள் அவசர முடிவுதான் காரணம் என்பதை உணர்வீர்கள்.

ரிஷபம்: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வேற்று மதத்தினரால் நன்மை கிட்டும். முன்கோபம் நீங்கும்.

மிதுனம்: சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றி அடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வீர்கள். கடனை பைசல் செய்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கடகம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்களது முயற்சிகளுக்கு மனைவியின் ஆதரவு அதிகரிக்கும்.

சிம்மம்: எதிர்காலத்துக்கென முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

கன்னி: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிரியமானவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். வீட்டில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும்.

துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நல்ல மனம் கொண்ட நண்பர்களைச் சந்திப்பீர்கள். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும்.

விருச்சிகம்: உறவினர்கள், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும்.

தனுசு: பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும்.

மகரம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

கும்பம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகி நிம்மதி கிட்டும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிரபலமானவர்களுடன் சந்திப்பு நிகழும்.

மீனம்: குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். பிரார்த்தனைகள் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close