[X] Close

நவராத்திரி; நான்காம் நாளில்..!


navarathiri-spl

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Oct, 2018 15:16 pm
  • அ+ அ-

   நவராத்திரியின் நான்காம் நாளில், தேவியை எப்படி உபாஸிக்க வேண்டும் தெரியுமா? -

 அம்பிகையை, ஆயிரம்கண்ணுடையவளை, கருணையுள்ளம் கொண்டவளை, சக்தி தேவியை, அருள்மழை பொழியும் அம்பிகையை நான்காம் நாளில் ஸ்ரீவைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும்.

    சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை  ஏந்தியபடி காட்சி தருபவள் ஸ்ரீவைஷ்ணவிதேவி. தீயவற்றை சம்ஹரிப்பவள். நல்லவற்றையெல்லாம் வாரி வழங்குபவள். இவளின் வாகனம் கருடன்.

   நான்காம் நாள் நைவேத்தியமாக  எலுமிச்சை சாதம் படைத்து ஸ்ரீவைஷ்ணவிதேவியை மனதார வழிபடவேண்டும். அப்படி வழிபட்டால், வாழ்வில் இனிமை கூடும். வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close