இந்தநாள் உங்களுக்கு எப்படி?

மேஷம்: சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக் கூடும். பணப்பற்றாக்குறை ஏற்படும். மின் சாதனங்கள் பழுதாகும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
ரிஷபம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் பெறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். புதுத் தெம்பு பெற்று புத்துணர்ச்சியுடன் திகழ்வீர்கள்.
மிதுனம்: வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். தந்தைவழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பதவி, பொறுப்புகள் தேடிவரும்.
சிம்மம்: உங்களிடம் இருக்கும் சோர்வு, களைப்பு நீங்கி புது முயற்சிகளில் உற்சாகமாக இறங்குவீர்கள். வீடு, மனை விற்பது, வாங்குவதும் லாபகரமாக முடியும். திடீர் பயணம் உண்டு.
கன்னி: தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நீண்டநாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும்.
துலாம்: மனக்குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். இந்தி, தெலுங்கு மொழி பேசுபவர்களால் நல்லது நடக்கும். பண வரவு உண்டு.
விருச்சிகம்: உடல் உஷ்ணம் அதிகரிக்கக் கூடும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். ஊர்ப் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
தனுசு: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். நெருங்கிய உறவினர், நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள்.
மகரம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நண்பர்களிடம் இருந்துவந்த பகை நீங்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.
கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.
மீனம்: தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும்.
இதை மிஸ் பண்ணாதீங்க...
- விஜய் ஓட்டு கேட்டு வீதிக்கு வந்தா, இங்கே பலருக்கும் பீதி கிளம்பும் – நாஞ்சில் சம்பத்
- தீபாவளிக்கு அரசு சிறப்புப் பேருந்துகள்; நவம்பர் 1ம் தேதி முதல் முன்பதிவு
- சிம்புவுக்கு வில்லனா நடிக்கச் சொன்னாங்க; அவ்ளோ பெருந்தன்மை இல்லை எனக்கு! - ’வடசென்னை’ தனுஷ்
- பிக்பாஸ் சுஜாவுக்கு கல்யாணம் - சுஜா பிறந்தநாளில் ‘கல்யாணத்தேதி’ பரிசு