[X] Close

நலம் தரும் நவராத்திரி : தானங்கள்... பலன்கள்!


navarathiri-spl

  • kamadenu
  • Posted: 11 Oct, 2018 09:38 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

 நலமெல்லாம் தரும்  நவராத்திரியில், தினமும் பூஜை முடிந்ததும் வீட்டுக்கு வந்திருக்கும் பெண்களுக்கு மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்குவார்கள். எந்தப் பொருட்களைத் தானமாக வழங்குகிறார்களோ, அந்தப் பொருட்களுக்கு எந்தக் காலத்திலும் எப்போதும் எவரிடமும் கையேந்தத் தேவையில்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள். .

  எந்தந்த நாளில் என்னவெல்லாம் மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்கலாம் என்றும் தாத்பரியம் தெரிவிக்கிறது. பிரதமை திதியில் துவங்கும் போது, வீட்டுக்கும் பூஜைக்கும் வரும் பெண்களுக்கு கூந்தலை அலங்கரிக்கத் தேவையான எண்ணெய், மலர்கள், ஹேர் பின், ரிப்பன் முதலான பொருட்கள் மற்றும் புத்தாடையுமாக வழங்க வேண்டும்.

  துவிதியை நாளில்... குங்குமம், மஞ்சள் ஆகியவற்றை ஆடையுடன் சேர்த்துத் தருவது நல்லது. இதனால் மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம்.  திருதியை நாளில், கண்ணாடி, மஞ்சள், கண் மை ஆகியவற்றை உடையுடன் சேர்த்து தானமாக வழங்கவேண்டும். இவற்றை வழங்குவதால், காரியத் தடைகள் அனைத்தும் நீங்கும்.  

சதுர்த்தியில், தம்பதியாக வரச் செய்து பொன்னிற ஆடையும் மஞ்சள், சந்தனமும் தானமாக  வழங்குவது வழக்கம். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். ஒற்றுமை பலப்படும். பஞ்சமியில்,  ஐந்து மங்கலப் பொருட்களையும் ஆடையையும் தானமாக வழங்கலாம். தடைப்பட்ட திருமணங்கள் விரைவில் நடந்தேறும்.

   சஷ்டி திதியில், மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, புடவை, ஜாக்கெட் பிட் ஆகியவற்றுடன் தட்சணையாகவும் வைத்துக் கொடுக்கலாம். விரும்பியபடி நல்ல கணவரை அடையலாம்.   சப்தமி திதியில், பெண்களுக்கு புத்தாடையுடன் ஏழு மங்கலப் பொருட்களை ஆடையுடன் சேர்த்துக் கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும்!

 அஷ்டமி திதியில், எட்டு விதமானப் பொருட்களை புத்தாடையுடன் வழங்கலாம். ரொம்பவே விசேஷம். அந்தக் காலத்தில் யானைக்கு தேங்காய் பழங்கள் கொடுத்து, நமஸ்கரிப்பார்களாம்.   நவமி ரொம்ப விசேஷம். தேவ குதிரை பிறந்தநாள் என்கிறது புராணம். ஆதிகாலத்தில், வெள்ளைக் குதிரைக்கு  கொள்ளு கொடுப்பார்கள். மாணவர்களுக்கு புத்தகங்கள், பேனா, புத்தாடைகள் வழங்கலாம். சந்ததி சிறக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

 தசமி நாளில், தேவாரம், திருவாசகம் முதலான பக்தி நூல்களை ஆடையுடன் சேர்த்து வழங்கலாம். இறையருள் கிடைப்பது நிச்சயம்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close