[X] Close

நவராத்திரி ; ராகுகாலம்; பட்டீஸ்வரம் துர்கை!


navarathiri-durgai

  • kamadenu
  • Posted: 10 Oct, 2018 19:14 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

கும்பகோணத்துக்கு கோயில் நகரம் என்றொரு சிறப்பும் உண்டு. காமதேனுப் பசுவின் குழந்தை பட்டி எனும் கன்றுக்குட்டி, சிவபெருமானை நினைத்து பூஜித்து, சிவனருள் பெற்ற புண்ணியம் மிக்க பூமி எது தெரியுமா? அந்தத் திருத்தலம்... பட்டீஸ்வரம்.

பட்டீஸ்வரத்தில் பசுங்கன்று வழிபட்ட சிவனாரின் திருநாமம் தேனுபுரீஸ்வரர். ஆனாலும் இந்தத் தலத்தின் நாயகிதான் சிறப்பு மிக்கவள். உலகம் போற்றும் உன்னதமான பேரருளை வழங்கிக் கொண்டிருப்பவள். வாழ்வில் ஒரேஒருமுறை, பட்டீஸ்வரம் வந்து துர்கையைக் கண்ணாரத் தரிசித்துவிட்டால், உங்கள் பாவமெல்லாம் பறந்துவிடும்.

மூன்று கண்களும் எட்டுத் திருக்கரங்களுமாக அற்புதமாகக் காட்சி தருகிறாள் துர்கை.    

  மிகவும் சக்தி வாய்ந்தவள்  இந்த துர்கை. இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா?

பட்டீஸ்வரம் துர்கை. பக்தர்களைக் காக்க உடனே புறப்படும் தயார் நிலையில் உள்ள சிற்ப நுட்பத்துடன் காட்சி தருகிறாள். இவருடைய எட்டுக் கரங்களில் ஒரு கையில் அமர்ந்து அழகுக் காட்டிக்கொண்டிருக்கிறது கிளி ஒன்று!

 நவராத்திரி காலங்களில், பட்டீஸ்வரம் துர்கைக்கு தினமும் நடைபெறுகிறது பிரமாதமான அலங்காரம். கோயிலின் சித்தநாத குருக்கள், நல்லநாளிலேயே அலங்காரம் பண்ணி அசத்திவிடுவார். நவராத்திரிக் காலங்களில், இன்னும் அழகூட்டி அலங்கரிப்பார்.

 ஒன்பது நாளும் ஸ்ரீதுர்கையை தரிசித்து வழிபடுவதற்கு தமிழகம், கர்நாடகம் என பல மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்! பொதுவாகவே ராகுகாலத்தில் துர்கையை வழிபடுவது வளம் தரும். அதிலும் குறிப்பாக, நவராத்திரி காலங்களில், ராகுகால வேளையில், துர்கையைத் தரிசிப்பது சகல ஐஸ்வரியங்களையும் வழங்கும் என்கிறார் சித்தநாத குருக்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close