[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 10 Oct, 2018 08:42 am
  • அ+ அ-

மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதரர் வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. 

ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு பெருகும். திடீர் பயணம் உண்டு.

கடகம்: நண்பர்கள் வட்டம் விரியும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த ஒருவரைச் சந்திப்பீர்கள்.

சிம்மம்: கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். 

துலாம்: அடுத்தவர்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள். மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் உங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.

விருச்சிகம்: அலைச்சலுக்குப் பிறகே காரியங்கள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். 

தனுசு: சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆதரவு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கும்பம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்துவந்த மோதல்கள் விலகும். ஆடை, ஆபரணம் சேரும்.

மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். யாரும் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

 

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close