[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • வி.ராம்ஜி
  • Posted: 09 Oct, 2018 09:06 am
  • அ+ அ-

மேஷம்: அதிரடி திட்டங்களைத் தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களைத் தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும்.

ரிஷபம்: முகப்பொலிவு கூடும். சமயோசிதமாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

மிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவர்ந்து விடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

கடகம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும்.

சிம்மம்: மனக்குழப்பங்கள் விலகி தெளிவு பெறுவீர்கள். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள்.

கன்னி: சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்வார்கள். எனவே கொஞ்சம் நிதானத்துடன் பேசுங்கள். 

துலாம்: விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள்.

விருச்சிகம்: வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகையுண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவரைச் சந்திப்பீர்கள்.

தனுசு: உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள்.

மகரம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். நவீன ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். அடுத்தவர்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள். சாலையைக் கடக்கும்போது கவனம் தேவை. 

மீனம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய மனக்கசப்பு நீங்கும். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close