[X] Close

சபரிமலையின் பாரம்பரியம் காக்க ஐயப்ப பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை


sabarimala-temple

  • kamadenu
  • Posted: 08 Oct, 2018 11:06 am
  • அ+ அ-

சபரிமலையின் பாரம்பரியம் காக்க வேண்டி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சி திருச்சி மேல சிந்தாமணி சிதம்பரம் மகாலில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் புத்தூர் கிளைச் செயலாளரும், குருசாமியுமான ஆர்.கிருஷ்ணமூர்த்தி சிறப்பு பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட தலைவர் என். ரமேஷ், செயலாளரும், மத்திய துணைத் தலைவருமான எம்.தர், பொருளாளர் ஜெ. சுரேஷ், மண்டல நிர்வாகிகள் இளங்கோ, ராஜகோபால், முத்து, ஆறுமுகம், புத்தூர் கிளை தலைவர் அழகப்பன், பொருளாளர் வி.ஜெகன்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி என்ற நிலை மாற வேண்டும். பழைய பாரம்பரிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்து ஐயப்பனுக்கு சரண கோஷம் எழுப்பி கூட்டு பிரார்த் தனை நடத்தப்பட்டது. இதில் ஐயப்ப குருசாமிகள், ஐயப்ப பக்தர்கள், ஆன்மீக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close