[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 08 Oct, 2018 09:16 am
  • அ+ அ-

மேஷம்: தொழில், வியாபாரத்தில் சிலநுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மற்றவர்களுக்காக செலவு செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும்.

**

ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். குடும்பத்துடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.

**

மிதுனம் புதிய கோணத்தில் சிந்தித்து, செயல்படுவீர்கள். வீடுவாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின்உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.

**

கடகம்: உறவினர்கள் மத்தியில் மரியாதை கூடும். சுப நிகழ்ச்சிகளாலும்,விருந்தினர் வருகையாலும் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது,விற்பது லாபகரமாக அமையும்.

**

சிம்மம்: மனைவி வழி உறவினர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். மின்னணுமின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.

**

கன்னி: பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். எந்த சூழலிலும்பொறுமையுடன் இருங்கள். உறவினர்,நண்பர்களின் பேச்சுசெயலால் அதிருப்தி அடைவீர்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.

**

துலாம்: வெளி வட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தலைவலி, உடல்வலி வந்து நீங்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள்.

**

விருச்சிகம்: குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள்.

**

தனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உறவினர் வீட்டுவிசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்பு நிகழும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

**

மகரம்: பிரச்சினைகளின் ஆணிவேரைக்கண்டறிந்து சரிசெய்வீர்கள். பிள்ளைகளை அவர்கள் விரும்பும் புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

**

கும்பம்: எதிலும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக செயல்படுவது அவசியம். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தை போராடி பெறுவீர்கள்.

**

மீனம்: சுப நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்துகொள்வீர்கள். புதியவர்களுடன் நட்பு மலரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். திட்டமிட்டு செயல்படுவதால் வெற்றி பெறுவீர்கள்.

 

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close