[X] Close

மஹாளய அமாவாசையில்... யாருக்கும் தர்ப்பணம் செய்யலாம்!


mahalaya-amavasai

  • வி.ராம்ஜி
  • Posted: 07 Oct, 2018 12:31 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி 

பொதுவாக,   அமாவாசை  முதலான காலங்களில், அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, கொள்ளுத் தாத்தா, கொள்ளுப் பாட்டி என மூதாதையரின் பெயர் சொல்லி தர்ப்பணம் செய்து அவர்களை வழிபடுவோம். ஆனால், புரட்டாசி மஹாளய அமாவாசை  நாளில் மட்டும் ஓர் மகத்துவம்... இந்த அமாவாசையில், இறந்துவிட்ட யாருக்கு வேண்டுமானாலும் தர்ப்பணம் செய்து வழிபடலாம். என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.  

அதாவது, சிறுவயதில் நம் மீது பிரியம் காட்டிய நம் தெருவில் உள்ள நண்பனின் அப்பா, அம்மா, நாம் இந்த நிலைக்கு வருவதற்கு வித்திட்ட ஆசிரியர்கள், எட்டாம் வகுப்பு படிக்கும் போது உடல்நலக்குறைவால் இறந்துவிட்ட பால்ய நண்பன், வீட்டில் ஆசை ஆசையாக வளர்த்த நாய், பூனை, நாம் மிகவும் பூஜிக்கிற மகான்கள், மாமனார், மாமியார் முதலான உறவுகள் என யாருக்கு வேண்டுமானாலும் தர்ப்பணம் செய்து வழிபடலாம்.  நாளை... 8ம் தேதி, மஹாளய அமாவாசை. தர்ப்பணம் செய்ய மறந்துவிடாதீர்கள்.

நம் தாய்- தந்தை மற்றும் அவர்களின் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகு, பித்ருக்கள் எனப் போற்றப்படுகிறார்கள். நாம் வாழ்வது பூலோகத்தில். அவர் கள் வாழ்வது பித்ருலோகத்தில்! ஒவ்வொரு மாதமும் அமாவாசை முதலான முக்கியமான நாட்களில் அவரவரின் வீடுகளுக்குப் பித்ருக்கள் வந்து, வாசற்படிக்கு முன் நின்று, தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதித்துச் செல்கிறார்கள் என்றும், ஒருவேளை சிறப்பாகத் தர்ப்பணம் செய்யாமல் விட்டு, அதனால் அவர்கள் மனவருத்தம் அடைந்தால், அது  சாபமாக மாறி நம்மைப் பாதிப்பதாகவும் சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

  ஆனாலும், இந்தக் காலத்தில் பித்ருக்களுக்கான ஆராதனையை உரிய நாளில் செய்பவர்கள் மிகச் சிலர்தான்! பலர் ஆசைப்பட்டும், பல்வேறு காரணங்களால் செய்யாது விடுகின்றனர். அப்படியெனில், செய்யாதவர்களுக்கு என்ன வழி?

   நிச்சயமாக உண்டு. புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில், பௌர்ணமியை அடுத்த தேய்பிறை நாட்கள் முழுவதுமே மிகப் பெரிய ஆற்றல் நிறைந்தவை. இவற்றை மகாளய பட்ச புண்ய காலம் என்பார்கள். தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா, தாயார், பாட்டி, கொள்ளுப் பாட்டி (தாயார் உயிருடன் இருந்தால் பாட்டி, கொள்ளுப் பாட்டி, எள்ளுப் பாட்டி), தாய் வழித் தாத்தா- பாட்டி என மூன்று தலைமுறையினர், நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் அனைவருக்குமாக இந்தக் காலங்களில் தர்ப்பணம் செய்யலாம். அப்படிச் செய்யும்போது, நமக்கும் நம் சந்ததிக்குமான நன்மைகள் கிடைக்கும்.

நாளைய தினம் 8ம் தேதி திங்கட்கிழமை புரட்டாசி மஹாளய அமாவாசை நாளில்,  மறக்காமல் தர்ப்பணம் செய்யுங்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close