[X] Close

நாளை... மகாளய அமாவாசை; தர்ப்பணம் செய்ய மறக்காதீங்க! பித்ரு சாபம் நீங்கும்; தரித்திரம் விலகும்; சந்ததி சிறக்கும்!


mahalaya-amavaasai

  • வி.ராம்ஜி
  • Posted: 07 Oct, 2018 10:23 am
  • அ+ அ-

    எங்கோ இருக்கும் அம்மா அப்பாவுக்கோ, நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அவர்களின் அக்கவுண்ட்டில் பணம் செலுத்தினால், அது அவர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிடுகிறதுதானே. அதேபோல, நாம் செய்கிற பித்ருக் கடனானது, அதாவது முன்னோர் ஆராதனையானது அவர்களை உரிய முறையில் சென்றடைகிறது. அப்படிச் சென்றடைவதுடன் மட்டுமின்றி, பிறகு அதுவே பலனாக, பலமாக நம்மை வந்தடைகிறது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

 நாளை... திங்கட்கிழமை 8ம் தேதி, அமாவாசை. புரட்டாசி மகாளய அமாவாசை.  தர்ப்பணம் செய்ய மறக்காதீர்கள். அமாவாசை தர்ப்பணம் விசேஷம். அதிலும் புரட்டாசி மகாளய அமாவாசை தர்ப்பணம், இன்னும் இன்னுமான பலன்களையும் வாழ்வில் தெளிவையும் நிம்மதியையும் தந்தருளும் என்கிறது சாஸ்திரம்.

எனவே, நாம் நன்றாக வாழவும் நம் சந்ததிகள் சீரும் சிறப்புமாக வாழவும் அமாவாசை நாளில், முன்னோர் ஆராதனையைச் செய்து, அவர்களின் ஆசியைப் பெறுங்கள். அவர்களின் ஆத்மா குளிரக் குளிர, நம் வாழ்வும் நிம்மதியும் நிறைவுமாக இருக்கும் என்பது உறுதி!

அமாவாசை தர்ப்பணம் செய்யுங்கள். முடிந்தால், நான்கைந்து பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். அம்மாவை நினைத்து யாருக்கேனும் புடவையோ, அப்பாவை நினைத்து  வேஷ்டி, சட்டையோ வாங்கிக் கொடுங்கள். நீங்கள் முன்னோரை நினைத்து ஆராதனைகள் செய்யச் செய்ய, அவர்களால் கிடைக்கிற பூரண ஆசீர்வாதமே, உங்கள் சந்ததியினருக்கு நீங்கள் சேமித்துத் தருகிற சொத்து என்பதை மறந்துவிடாதீர்கள்.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close