[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 07 Oct, 2018 09:28 am
  • அ+ அ-

மேஷம்: உறவினர்கள், நண்பர்கள் வகையில் அனுகூலமான நிலை காணப்படும். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் சிறப்பாகக் கூடிவரும். சொத்து வழக்கில் வெற்றியுண்டு.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அடிமனதில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை விலகும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

மிதுனம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளைத் துணிச்சலாக எடுத்து வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.

கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். கல்யாண முயற்சிகளும் நல்ல விதத்தில் முடியும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

சிம்மம்: சோர்வு, களைப்பு பிற்பகலுக்குப் பின்னர் நீங்கும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். புதிய வாய்ப்புகள் குறித்து தீர யோசித்து முடிவெடுப்பது நல்லது. திடீர் பயணம் உண்டு.

கன்னி: சுபச் செலவுகள் வரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தீர்களே, இனி பெரிய வீட்டுக்குக் குடிபுகுவீர்கள்.

துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்: எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. சகோதரர்களின் உதவி கிடைக்கும். பொதுக் காரியங்களில் பரபரப்புடன் செயல்படுவீர்கள். வாகனப் பழுதை நீக்குவீர்கள்.

தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். புதிய பொறுப்பு தேடி வரும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

மகரம்: வீண் விரயம், டென்ஷன், பிள்ளைகளால் பொருட்செலவு வரக்கூடும். வாகனம் பழுதாகும். அக்கம்பக்கத்தினருடன் அளவுடன் பழகுங்கள். திடீர் பயணம் ஏற்படக்கூடும்.

கும்பம்: வரவேண்டிய பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளில் சுமுகத் தீர்வு கிடைக்கும். குலதெய்வக் கோவிலுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

மீனம்: மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் நீங்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். நவீன மின்சாதனம் வாங்குவீர்கள்.

 

 

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close