[X] Close

சகல யோகமும் தரும் சனிப்பிரதோஷம்! மறக்காம சிவன் கோயிலுக்குப் போங்க!


sani-pradhosham

  • வி.ராம்ஜி
  • Posted: 06 Oct, 2018 09:26 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

சகலயோகமும் தரும் சனிப்பிரதோஷநாளில் (6.10.18) மாலையில், மறக்காமல் சிவாலயம் சென்று, சிவனாரையும் நந்திதேவரையும் தரிசனம் செய்யுங்கள். எல்லா நல்லதுகளையும் அடைவீர்கள்.

பிரதோஷத்தன்று சிவாலயம் சென்று தரிசனம் செய்வதும் நந்திதேவருக்கு நடைபெறும் விசேஷ அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு, பிரார்த்தனை செய்வதும் மிகுந்த பலனைத் தந்தருளும் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஏகாதசியில் பெருமாள் கோயிலுக்கும் திரயோதசியில் சிவன் கோயிலுக்கும் சென்று தரிசித்து வணங்குவது வழக்கம். திரயோதசி திதியில் வருவதே பிரதோஷம். இதில் பிரதோஷ வேளை என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள நேரம், பிரதோஷ நேரம் எனப்படும். எனவே, இந்த பிரதோஷ நாளில், பிரதோஷ வேளையில், அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது, சிவனாரின் பேரருளைப் பெற்றுத் தரும் என்பது ஐதீகம்.

அதிலும் குறிப்பாக, சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம், சனிப் பிரதோஷம் என்றும் சனி மகா பிரதோஷம் என்று போற்றப்படுகிறது. மேலும் சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்றே போற்றுகின்றன சிவாகம நூல்கள். ஆகவே சனிக்கிழமையன்று வரும் பிரதோஷத்தில், சிவாலயம் சென்று தரிசித்து வேண்டுவது, சகல பாபங்களையும் போக்கிவிடும். யோகமும் பலமும் கிடைக்கப் பெற்று, சகல நல்லதுகளையும் அடைய வழி செய்வார் சிவனார் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மேலும், பிரதோஷ நாளில், நந்திதேவரே நாயகன். பிரதோஷ நாயகன். ஆகவே நந்திதேவருக்கு அப்போது, 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். எனவே, பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், திரவியப் பொடி, அரிசி மாவு, தேன் முதலான அபிஷேகப் பொருட்களை தங்களால் முடிந்தது வழங்குங்கள்.

அத்துடன் நந்திதேவருக்கு அருகம்புல், வில்வம், செவ்வரளி முதலான மலர்களை வழங்கி ஆராதனை செய்யுங்கள்.

சனி மகா பிரதோஷ நாளில், சர்வ ஐஸ்வர்யமும் கிடைத்து, இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளியுண்டாக, சிவ தரிசனம் செய்யுங்கள். சீரும் சிறப்புமாய் வாழ்வது உறுதி!

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close