[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 06 Oct, 2018 09:20 am
  • அ+ அ-

மேஷம்: பழைய வாகனத்தை மாற்றி நவீன வாகனம் வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.

ரிஷபம்: சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

மிதுனம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். இருப்பினும் அடுத்தடுத்து செலவுகள் இருக்கும். சகோதரர் வகையில் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். வெளியூர் பயணம் ஏற்படலாம்.

கடகம்: வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புது வாகனம், ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாகும்.

சிம்மம்: அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். லேசான கிறுகிறுப்பு, பதட்டம் ஏற்படக் கூடும். முன்கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.

கன்னி: திட்டமிட்டபடி பயணங்கள் இனிதாக அமையும். நீண்ட நாட்களாக விலகியிருந்த நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். திடீர் பண வரவு மகிழ்ச்சியைத் தரும்.

துலாம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்: கடந்த கால இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். அரசு காரியம் சாதகமாக முடியும். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.

தனுசு: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆறுதலாக இருப்பார்கள். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமொழி மொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

மகரம்: சின்னதாக ஒருவித சலிப்பு, வெறுப்பு, தாழ்வுமனப்பான்மை வந்து போகும். யோகா, தியானம் செய்வது மனதுக்கு தெம்பைத் தரும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

கும்பம்: உங்களின் முன்னேற்றத்துக்குத் தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மீனம்: தோற்றப் பொலிவு கூடும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். வீடு, வாகனத்தைச் சீர்படுத்துவீர்கள்.

 

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close