[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 05 Oct, 2018 07:55 am
  • அ+ அ-

மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். வாகனம் வாங்கும் அமைப்பு உண்டாகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படலாம்.

ரிஷபம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வழக்கும் சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். பண வரவு உண்டு.

மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கடகம்: உடல் உஷ்ணம் அதிகரிக்கும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழியோ, உத்தரவாதமோ தரவேண்டாம். சொந்த ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

சிம்மம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். திடீர் பயணங்கள் வரும். நெருங்கிய உறவினர், நண்பர்கள் தாமே விரும்பி வந்து பேசுவார்கள்.

கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும் விருந்தினர் வருகை உண்டு.

விருச்சிகம் சவாலான விஷயங்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. விலகியிருந்த பழைய நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். 

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். புது வேலை அமையும். வீடு, வாகனம் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மகரம்: இங்கிதமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் ஒருபடி உயரும். மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: சமயோசித புத்தியுடன் பல காரியங்களையும் வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள்.  கைமாற்றாக வாங்கியிருந்த திருப்பித் தருவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

மீனம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு தலைமைப் பொறுப்புகள் கிடைக்கும்.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close