[X] Close

குருப்பெயர்ச்சி: தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள்!


gurupeyarchi-podhu-palangal

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • kamadenu
  • Posted: 04 Oct, 2018 08:13 am
  • அ+ அ-

குருப்பெயர்ச்சி - பொதுப்பலன்கள்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 

இந்த குருப்பெயர்ச்சி குரு பகவான் செவ்வாயினுடைய வீட்டிற்கு மாறி இருக்கிறார். இதில் செவ்வாயினுடைய வீட்டிற்கு மாறி இருப்பதால் - செவ்வாய் என்பவர் பூமிகாரகன், மங்களநாயகன், மங்களகாரகன் என்ற காரகத்துவத்தின் அடிப்படையில் கண்டிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் மிக அபரிமிதமான வளர்ச்சி என்பது இருக்கும் அதேபோல பூமி சம்பந்தமான பொருட்களின் விலைகளும் உயரும். 

சுபகாரக கிரகமான குருவின் பெயர்ச்சி நடக்கும் போது இருக்கக்கூடிய லக்னமான ரிஷப லக்னத்திற்கு ஏழாமிடத்திற்கு குரு பகவான் வருகிறார். இதனால் நிறைய மங்கல நிகழ்ச்சிகள் சுபநிகழ்ச்சிகள் நிறைய நடக்கும். 

லக்கினத்திற்கு ஒன்பதாம் இடத்தில் செவ்வாய் உச்சம் அமைந்திருக்கிறது. செவ்வாய் உச்சமாக இருப்பதால் கண்டிப்பாக சில நாடுகளுக்குள் போர் சூழும் அபாயம் ஏற்படலாம். யுத்தத்திற்கும் காரகன் செவ்வாயே. ஆனாலும் செவ்வாயினுடைய வீட்டில் குரு பகவான் அமர்ந்திருப்பதால் போர் அபாயம் வந்தாலும் கூட போர் வராது. 

லோக ஜாதகத்தில் இந்தியாவினுடைய ராசி என்பது மகரம். மகர ராசிக்கு எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்தியாவுக்கும் இருக்கும். அதனால் மகர ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு பகவான் வந்து இருப்பதால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் என்பது இருக்கும். விருச்சிக ராசி என்பது நீர் ராசி. தண்ணீர் சார்ந்த பொருட்கள் அனைத்தும் லாபங்களை கொடுக்கும். அதே நேரத்தில் விலையேற்றமும் இருக்கும். 

கடகத்தில் ராகுவும் மகரத்தில் கேதுவும் இருப்பதால் ஆன்மிகத் துறையில் மிக அதிகமான குழப்பங்கள் இருந்து கொண்டிருக்கிறது. கடகத்தில் இருக்கக்கூடிய ராகுவை குருபகவான் தனது 9ம் பார்வையால் பார்ப்பார். அப்போது ராகுவினுடைய ஆதிக்கம் கொஞ்சம் அமைதியாகும். குரு பகவானுடைய மாற்றத்திற்கு பிறகு ஆன்மிகத் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் என்பது நிகழும். 

அரசியல் சார்ந்த விஷயங்களில் மிகப்பெரிய மாற்றங்கள்:

விருச்சிக ராசி சம்பந்தப்பட்டவர்களுக்கு இது ஒரு அற்புதமான பெயர்ச்சி. கண்டிப்பாக அரசியலில் விருச்சிக ராசியை சார்ந்தவர்கள் சாதிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். 2019 நாடாளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய போட்டிகள் என்பது இருக்கும். மீண்டும் ஒருமுறை தற்போது இருக்கும் அரசே வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். 

தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் முக்கியமாக ராகு கேது பெயர்ச்சியை கணக்கில் எடுக்க வேண்டும். ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் என்பது நிகழும். கண்டிப்பாக நிகழும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. 

வானிலையை பொருத்தவரை தண்ணீர் ராசிக்கு குரு பகவான் வருவதால் விவசாயம் செழிக்கும். விவசாயத்திற்கு தேவையான மழை வளம் மிக அதிகமாக இருக்கும். மக்களை பயமுறுத்தும் வகையில் இல்லாமல் மக்களுக்கு தேவையான அளவுக்கு இந்த மழைப்பொழிவு என்பது இருக்கும். 

குருவுக்கு திரிகோணத்தில் ராகவனுடைய சஞ்சாரம் இருக்கறதுனால அனைத்து மத சம்பந்தமான நம்பிக்கைகளுக்கும் அவப்பெயர் ஏற்படலாம். அவரவர்கள் மதம் சார்ந்த பரிகாரங்களை செய்யும் போது இது சரியாகும்.

உதாரணமாக சைவம் சார்ந்தவர்கள் சிவபுராணம் சொல்வது - திருப்பதிகங்கள் பாடுவது, ஸ்ரீவைஷ்ணவர்கள் பிரபந்தம் சேவிப்பது, கிறிஸ்தவ சார்ந்தவர்கள் ஜெப கூட்டங்கள் நிறைய நடத்துவது போன்றவைகளை கடைபிடிக்க வேண்டும். தனுசு ராசி தனுசு ராசியில் சனி பகவானுடைய சஞ்சாரம் இருப்பதால், ஒழுக்கம் சார்ந்த குறைபாடுகள் அதிகமாக இருந்தால் அவை இந்த காலகட்டத்தில் வெளிப்படும்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close