[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 04 Oct, 2018 07:16 am
  • அ+ அ-

மேஷம்: வீடு மாற நினைத்தவர்களுக்கு நல்ல வீடு அமையும். வாகனம் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு நல்ல பதில் வரும்.

ரிஷபம்: தொட்டதெல்லாம் துலங்கும். சகோதரர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். விசா கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மிதுனம்: பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். அரசாங்கத்தால் நன்மை உண்டு. நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கடகம்: யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். வெளியூர் பயணம் ஏற்படலாம்.

சிம்மம்: பணம் ஒருபக்கம் வந்தாலும் செலவுகளும் அடுக்கடுக்காக இருக்கும். மற்றவர்களின் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தலையிட வேண்டாம். விருந்தினர் வருகை உண்டு.

கன்னி: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: பதவிகள் தேடி வரும். விசா கிடைக்கும். விலகியிருந்த பழைய உறவினர்கள், நண்பர்களைச் சந்திப்பீர்கள். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியை முன்னின்று நடத்துவீர்கள்.

விருச்சிகம்: மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். தக்க நேரத்தில் பிரபலமானவர்களின் உதவி கிடைக்கும். வாகனம் செலவு வைக்கும்.

தனுசு: வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. தொலைதூர பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மகரம்: போராடி வெற்றி பெறும் சக்தியைப் பெறுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். 

கும்பம்: பிரச்சினைகள், சிக்கல்கள், உடல்நலக் குறைவுகள் என்று வந்தாலும் எதையும் சாமர்த்தியமாகச் சமாளித்து விடுவீர்கள். புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

மீனம்: பிள்ளைகளால் உற்சாகமடைவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி நவீன வாகனம் வாங்குவீர்கள். வங்கிக் கடன் தாமதமின்றிக் கிடைக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள்.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close