[X] Close

ஒரே கோயிலில் ஏழு குருபகவான்கள்! திருச்சி உத்தமர்கோவில் அற்புதம்!


sapthaguru

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Oct, 2018 21:27 pm
  • அ+ அ-

குருப்பெயர்ச்சி ஸ்பெஷல்

கோயிலுக்குச் சென்று சிவனாரையும் உமையவளையும் வழிபடுவோம். அப்படியே முருகப்பெருமானையும் குரு பகவானையும்  வழிபடுவோம். ஆனால் ஒரே கோயிலில் ஏழு குரு பகவான்கள் அருள்கின்றனர். அந்தத் தலத்துக்குச் சென்று முடியும் போது, வழிபடுங்கள்.   சந்ததியுடன் சகல ஐஸ்வர்யங்களும் ஞானமும் பெற்று சந்தோஷமாய் வாழ்வீர்கள்.

திருச்சியில் பழைய சமயபுரம் டோல்கேட் அருகில் உள்ளது உத்தமர் கோவில். இங்குதான் ஏழு குரு பகவான்களும் அருளாட்சி செய்கின்றனர். அதுமட்டுமா? சிவா, விஷ்ணு, பிரம்மா மூவரும் கோலோச்சும் திருத்தலம் இது..

 திருச்சியில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில், பழைய சமயபுரம் டோல்கேட் பகுதி உள்ளது. இங்கிருந்து நொச்சியம் செல்லும் பாதையில், மேம்பாலத்துக் கீழ்ப்பகுதியில் அமைந்து உள்ளது உத்தமர்கோவில் எனும் அழகிய திருத்தலம்.

 இங்கே... இந்தத் தலத்தின் இன்னொரு முக்கியமானச் சிறப்பு... சப்த குரு ஸ்தலம் என விவரிக்கிறது ஸ்தல புராணம். ஏழு குரு கோலோச்சும் கோயில். தேவகுரு பிரகஸ்பதி, அசுர குரு சுக்கிராச்சார்யர், ஞான குருவாக சுப்ரமணியர், பரப்பிரம்மம் ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு குருவாக ஸ்ரீவரதராஜர், சிவ குருவாக ஸ்ரீதட்சிணாமூர்த்தி, சக்தி குருவெனக் காட்சி தரும் ஸ்ரீசௌந்தர்ய நாயகி ஆகியோர் அனைவரும் ஒரே இடத்தில், ஒரே தலத்தில், ஒரே ஆலயத்தில்  காட்சி தந்து  நமக்கு எல்லா நலமும் வளமும் தந்தருள்கின்றனர்.

  குரு பகவானின் அதிதேவதையும் பிரம்மாதான். சப்த குருவும்  கோயில் கொண்டிருக்கும் இங்கு வந்து, அவர்களைக் கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close