[X] Close

சென்னை பாடி  - குருபகவான்! குறைகளைப் போக்கும் குரு!


paadi-guru

பாடி திருவலிதாயம்

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Oct, 2018 19:42 pm
  • அ+ அ-

  குருப்பெயர்ச்சி ஸ்பெஷல்: 
 சென்னை பாடியில் உள்ள திருவலிதாயம் கோயிலுக்குச் சென்று, தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கும் குரு பகவானை தரிசியுங்கள். இந்த குருப்பெயர்ச்சி, உங்களுக்கு எல்லா நல்லதுகளையும் சத்விஷயங்களையும் கொண்டு சேர்க்கட்டும்.

  சென்னை பாடி பகுதியில், டி.வி.எஸ். லூகாஸ் பஸ் ஸ்டாப்புக்கு அருகில் அமைந்து உள்ளது திருவலிதாயம் திருத்தலம். இங்கே, மேற்கு நோக்கியபடி, தனிச்சந்நிதியில் இருந்தபடி காட்சி தந்து, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் குரு பகவான். நமக்கான விடியலைத் தந்தருளும் குரு என்கிறார்கள் ஆச்சார்யர்கள். .

  ஓர் தவறு செய்துவிட்டு, தன் சகோதரரின் மனைவியான மேனகையிடம் சாபம் வாங்கி நொந்துபோனார் குரு பகவான்.  சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவதற்காக, சிவனாரின் ஆணைப்படி, இந்தத் தலத்துக்கு வந்து சிவனாரை நோக்கி தவமிருந்தார் குரு பகவான். கடும் பூஜைகள் செய்தார். ஈசனின் அருளைப் பெற்று, சாபத்தில் இருந்து விமோசனமும் பெற்றார் என்கிறது ஸ்தல புராணம். .

  அப்போது இங்கேயே தங்கி, ஆலயத்துக்கு வருவோருக்கெல்லாம் தன் பார்வையால் அருள் வழங்க திருவுளம் கொண்டு, இன்றளவும் அருள்பாலித்து வருகிறார் குரு பகவான்.

  திருஞான சம்பந்தர், வள்ளலார், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் இங்கு வந்து பாடிப் போற்றியுள்ளனர். .

 எந்த தோஷத்துடன் குருபகவானை இங்கு வந்து தரிசித்தாலும் அதையெல்லாம் போக்கி அருள்வார் குரு பகவான். சந்தோஷத்தை நம் சந்ததி வரைக்கும் தந்தருள்வார். 

  பாடி திருவலிதாயம் வந்து, குரு பகவானைத் தரிசியுங்கள். குறையின்றி வாழ குரு பகவான் துணைநிற்பார்!

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close