[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 03 Oct, 2018 09:17 am
  • அ+ அ-

மேஷம்: நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

ரிஷபம்: மனசாட்சிப்படி செயல்படுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாகத் தள்ளிப் போன காரியங்கள் முடியும். நட்பு வட்டம் விரியும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மிதுனம்: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். மாலையில் முக்கியப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.

கடகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் ஏற்படக் கூடும். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கல்யாண முயற்சி பலிதமாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.

கன்னி: உடன்பிறந்தவர்களின் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைப்பீர்கள். நெருங்கியவர்களைச் சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். திடீர் பண வரவு உண்டு.

துலாம்: கணவன் - மனைவி இடையே நிலவிய மனக்கசப்பு நீங்கும். தடைபட்ட வேலைகள் முடியும். உறவினரால் ஏற்பட்ட பிரச்சினைக்குத் தீர்வு காண்பீர்கள். வாகனப் பழுது நீங்கும்.

விருச்சிகம்: காரியங்களை முடிப்பதில் அவசரம் வேண்டாம். பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். மாலை முதல் தடைகள் விலகும். விருந்தினர் வருகை உண்டு. 

தனுசு: பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். புதுப்பொருள் சேரும். வீட்டை விரிவுபடுத்தி கட்டத் திட்டமிடுவீர்கள். எந்தக் காரியமானாலும் கவனமுடன் செயல்படவும்.

மகரம்: வழக்கில் திருப்பம் ஏற்படும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பண வரவு உண்டு.

கும்பம்: உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நண்பர்கள் ஆதரிப்பார்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

மீனம்: பழைய கடனைத் தீர்க்கும் வழிமுறைகளை ஆராய்வீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். கலைப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close