[X] Close

குருப்பெயர்ச்சி: ரேவதிக்கான பலன்கள்!


gurupeyarchi-2018-revathi

  • kamadenu
  • Posted: 02 Oct, 2018 13:44 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ரேவதி:

கிரகநிலை:   

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் பதினேழாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்த்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

புத பகவானை  நட்சத்திர நாயகனாகக் கொண்ட ரேவதி நட்சத்திர அன்பர்களே!

இந்தக் குருப்பெயர்ச்சியால் ஆனந்தமாகவும், எதிர்காலத்தில் சுபிட்சமாகவும் இருக்க குருபகவானின் பார்வை உங்களுக்கு கிடைக்கப் போகிறது. குடும்பத்தில் சுப விரயங்களான வீடு, மனை, வாகனம், திருமணம் முதலான செலவுகள் இருக்கும். எதிர்பார்க்காமல் சில செலவுகள் உண்டாகும் என்றாலும் அவை அனைத்தும் முதலீடுகளாகவே அமையும்.

முக்கிய முடிவுகளை குடும்பத்தில் நீங்களே எடுப்பீர்கள். தொழிலில் உங்கள் காரியங்களுக்குத் தடையாக இருந்தவர்கள் அனைவரும் விலகி விடுவார்கள். நீங்கள் நிம்மதியாக தொழிலில் முன்னேறலாம். பழைய பாக்கிகள் வருவதற்கு நீங்கள் நிறைய அலைய வேண்டி வரலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். சிலருக்கு எதிர்பார்த்திருந்த கடன் தொகை கிடைக்கும். அவற்றை சுபகாரியங்களுக்குப் பயன்படுத்துவீர்கள். உடன் பணிபுரிபவர்களிடம் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள்  மறையும்.  பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

உங்களுக்கு 70% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ பணச்சிக்கல் தீரும்.

- வாக்குறுதிகளைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சென்று அர்ச்சனை செய்து குருபகவானை வழிபடவும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன், குரு, சுக்கிரன்

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

எண்கள்: 2, 3, 9

நிறங்கள்: வெள்ளை, நீலம்

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close