[X] Close

குருப்பெயர்ச்சி: உத்திரட்டாதிக்கான பலன்கள்!


gurupeyarchi-2018-utthirattadhi

  • kamadenu
  • Posted: 02 Oct, 2018 13:01 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

உத்திரட்டாதி:

கிரகநிலை:   

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் பதி்னெட்டாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்த்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

சனி பகவானைநட்சத்திர நாயகனாகக் கொண்ட உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சி உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். குருபகவானை நீங்கள் தொடர்ந்து வழிபட வாழ்வில் முன்னேற்றத்தைக் காண முடியும். குடும்பத்தில் தாயாரின் உடல்நிலையில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும்.

உங்கள் மனதில் இருந்து வந்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். வீட்டுக்குத்  தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவு செய்வீர்கள். உங்களுக்குப் போட்டியாக இருந்த அனைவரும் விலகி விடுவார்கள். புதிய கட்டிடங்கள் கட்டுதல், பெரிய கடைகளை வாடகைக்கு எடுத்தல் போன்ற செலவுகள் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு உடல்நிலையில் இருந்து வந்த பின்னடைவு சரியாகும். சக பணியாளர்களால் ஏற்பட்ட சில அவமரியாதைகள் சரியாகும். பெண்களுக்கு, தீராத நோயினால் அவதிப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.

உங்களுக்கு 70% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ பயணங்கள் வெற்றியை தரும்.

- மனம் ஒரு நிலைப்படாது.

பரிகாரம்: துளசிமாலை சாற்றி பெருமாளுக்கு தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், சுக்கிரன், குரு

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடக்கு

எண்கள்: 2, 5, 6

நிறங்கள்: பச்சை, வெள்ளை

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close