[X] Close

குருப்பெயர்ச்சி : பூரட்டாதிக்கான பலன்கள்!


gurupeyarchi-2018-poorattadhi

  • kamadenu
  • Posted: 02 Oct, 2018 12:37 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பூரட்டாதி:

கிரகநிலை:   

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் பத்தொன்பதாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்த்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

குரு பகவானை நட்சத்திர நாயகனாகக் கொண்ட பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வித இன்னல்களையும் களையப் போகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. வழக்கு விவகாரங்களில் உங்களுக்குத்தான் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் மறையும். உங்கள் பேச்சைக் கேட்காதவர்களும் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள். தாயார் தாய் வழி உறவினர்கள் உங்களுடன் உறவாட வரலாம். அவர்களுடனான பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.

தொழில் - வியாபாரத்தைப் பொருத்தவரை சில புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். அவை பிற்காலத்தில் லாபம் தரக்கூடியனவாகவே இருக்கும். கவலை வேண்டாம். நீங்கள் எதிர்பார்த்திருந்த கடன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு லாபமான காலமாக இருக்கும். எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து சில காலம் வெளியூரில் தங்க நேரிடலாம். பெண்களுக்கு காரியங்களில் வெற்றி கிடைக்கும். தாய் வழி உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

உங்களுக்கு 70% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ எதிர்ப்புகள் விலகும்.

- வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்:

வியாழன் தோறும் நெய்விளக்கேற்றி குருபகவானை வழிபடவும். மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: குரு, சுக்கிரன்

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

எண்கள்: 2, 3, 6

நிறங்கள்: வெள்ளை, பச்சை

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close