[X] Close

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா அக்.10-ல் தொடக்கம்: 19-ம் தேதி நள்ளிரவு சூரசம்ஹாரம்


dhasara-function-at-gulasekarapatinam

  • kamadenu
  • Posted: 02 Oct, 2018 09:03 am
  • அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோயில் தசரா திருவிழா வரும் 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் 19-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறு கிறது.

இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக தசரா திரு விழா, மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தான்.

விரதம் தொடங்கும் பக்தர்கள்

ஆண்டுதோறும் 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா, இந்தாண்டு அக்டோபர் 10-ம் தேதி காலை 9 மணிக்கு கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு அணிந்து காளி, மிருகங்கள், காவலர், பெண் , மருத்துவர், ராஜா, ராணி என பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தசரா குழுவினர் பல்வேறு ஊர்களில் தசரா குடில் அமைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள்.

விழா நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தினமும் இரவு 9 மணிக்கு அம்மன் சிம்மம், கற்பகவிருட்சம், ரிஷபம், மயில், காமதேனு, பூஞ்சப்பரம், கமலம், அன்ன வாகனங்களில் துர்க்கை, விஸ்வகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீத கிருஷ்ணர், மகிஷாசுரமர்த்தினி, ஆனந்தநடராஜர், கஜலட்சுமி, கலைமகள் திருக்கோலங்களில் எழுந்தருளி திருவீதியுலா நடைபெறும்.

இதுதவிர தினமும் மாலையில் கோயில் கலையரங்கில் சமய சொற்பொழிவு, பரதநாட்டியம், பட்டிமன்றம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

சூரசம்ஹாரம்

தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 19-ம் தேதி இரவு 12 மணிக்கு நடைபெறும். இதையொட்டி இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வர் கோயில் முன்பாக எழுந்தருளி மகிசா சூரனை சம்ஹாரம் செய்வார். இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

அக்டோபர் 20-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் கோயில் கலையரங்கில் எழுந்தரு ளும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், சாந்தாபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

விரதம் நிறைவு

அன்று காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெறும். சப்பரம் மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்தவுடன் கொடியிறக்கப்படும். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு அவிழ்த்து, வேடம் களைந்து விரதத்தை நிறைவு செய்வார்கள். இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தி.பரஞ்சோதி, உதவி ஆணையர் சு. ரோஜாலி சுமதா, கோயில் செயல் அலுவலர் இரா.ராமசுப்பிரமணியன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close