[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 02 Oct, 2018 08:43 am
  • அ+ அ-

மேஷம்: எதிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தபந்தங்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். 

ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். திடீர் பயணம் உண்டு.

மிதுனம்: தாயாருடன் எதிர்பாராத வகையில் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். சாலையைக் கடக்கும்போது கவனம் தேவை. மின்சார சாதனங்கள் அடிக்கடி பழுதாகி தொல்லை தரும்.

கடகம்: சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படாதீர்கள். எதிர்பார்த்த தொகை தாமதமாக வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன வசதி பெருகும். வீடு கட்டுவதற்கான கட்டிட வரைபடத்துக்கு அனுமதி கிடைக்கும்.

கன்னி: உங்களின் ஆளுமைத் திறன் பளிச்சிடும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.

துலாம்: தந்தைவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாகும். புண்ணியக் காரியங்கள், சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

விருச்சிகம்: வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் கருத்துமோதலும், பிரச்சினைகளும் வரக்கூடும். முன்கோபத்தைத் தவிருங்கள்.

தனுசு: பழுதாகியிருந்த வாகனத்தைச் சரி செய்வீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மகரம்: மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய நண்பர்கள் தேடிவந்துப் பேசுவார்கள். அவர்களின் மூலமாக சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். தெய்வீக சிந்தனைகள் அதிகரிக்கும்.

மீனம்: ஆன்மிக அருள் பெறுவீர்கள். எதிர்காலத்தை உணரும் சக்தி உங்களுக்கு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் எல்லோரும் மதிப்பார்கள். விலகியிருந்த சொந்தபந்தம் தேடி வரும்.

 

 

 

 

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close