[X] Close

குருப்பெயர்ச்சி : சதய நட்சத்திரத்துக்கான பலன்கள்!


gurupeyarchi-sathayam

  • kamadenu
  • Posted: 01 Oct, 2018 20:56 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சதயம்:

கிரகநிலை:   

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் இருபதாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

ராகு பகவானை  நட்சத்திர நாயகனாகக் கொண்ட சதய நட்சத்திர அன்பர்களே!

குருபகவானின் அருளால் உங்களுக்கு வாழ்க்கையில்  கிடைக்க வேண்டிய அனைத்தும் தவறாமல் கிடைப்பதற்கு வழி செய்யப் போகிறார்.முக்கிய தருணங்கள் வாழ்வில் வரும் போது தெய்வ நம்பிக்கையுடன் அதை நாடுங்கள். வெற்றி நிச்சயம். 

குடும்பத்தில் மற்றவர்களிடம் தேவையில்லாமல் கருத்து சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. தாய் வழி உறவினர்களுடன் கொஞ்சம் தள்ளி இருப்பது நல்லது. மன சங்கடங்கள் வர வாய்ப்பு உள்ளது. பூர்வீகச் சொத்துக்கள் கைக்குக் கிடைக்கும். தொழிலில் நீங்கள் கவனமுடன் செயல்பட்டால் எந்த வித நஷ்டமும் இல்லாமல் இருக்கும். மற்றவர்களை தொழிலில் ஈடுபடுத்தும் போது உங்கள் கண் பார்வையில் அவர்களை வைப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு முக்கிய விஷயங்களில் அனைவரிடமும் கருத்து கேட்டாலும் தீர ஆலோசித்து முடிவெடுப்பது உங்களுக்கு வெற்றியைத் தரும். பெண்களுக்கு கணவருடனான மனவருத்தங்கள் நீங்கும்.

உங்களுக்கு 60% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன்  தரும்.

- உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: ஸ்ரீ லக்ஷ்மி ஸகஸ்ரநாமத்தை உச்சரித்து வாருங்கள். தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன், சுக்கிரன்

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

எண்கள்: 1, 3, 9

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close