[X] Close

குருப்பெயர்ச்சி : அவிட்டத்துக்கான பலன்கள்!


gurupeyarchi-avittam

  • kamadenu
  • Posted: 01 Oct, 2018 20:48 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அவிட்டம்:

கிரகநிலை:   

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் இருபத்தி ஒன்றாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

செவ்வாய் பகவானை நட்சத்திர நாயகனாகக் கொண்ட அவிட்ட நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சியால் உங்கள் சந்ததிகளுக்கு வேண்டியதைச் செய்ய அருள் புரிகிறார். நீண்ட நாட்களாக அவர்கள் விரும்பியதை இப்போது செய்யப் போகிறீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்பார்கள். உங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள்.

திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த விஷயங்கள் இப்போது நடைபெறும். தொழில்  செய்பவர்கள் தேவையில்லாமல் உங்கள் தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். புதிய ஆட்களை நம்பி அதிக முதலீடு செய்ய வேண்டாம்.

 உத்தியோகஸ்தர்கள் சக ஊழியருடன் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். கிடைக்கும் நேரத்தை பயனுள்ளதாக கழிப்பதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். பெண்களில் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

உங்களுக்கு 65% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

- பேச்சில் கவனம் தேவை.

பரிகாரம்: ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், சுக்கிரன்

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: நீலம், மஞ்சள்

எண்கள்: 2, 3, 6

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close