[X] Close

குருப்பெயர்ச்சி : திருவோணத்துக்கான பலன்கள்!


gurupeyarchi-thriuvonam

  • kamadenu
  • Posted: 01 Oct, 2018 20:34 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

திருவோணம்:

கிரகநிலை:   

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் இருபத்தி இரண்டாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

சந்திரனை நட்சத்திர நாயகனாகக் கொண்ட திருவோண நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சி உங்கள் வாழ்வில் ஒவ்வொரு பொன்னான தருணத்தையும் உங்களுக்கு உணர்த்தும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். அது சம்பந்தமான வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். கணவன் - மனைவி இடையே இருந்த மனஸ்தாபங்கள் அகலும். 

தொழில் - வியாபாரம் எப்போதும் போல் இருக்கும் என்றாலும் உங்களின் இடைவிடாத முயற்சியால்  லாபம் பெறலாம். எதிர்பார்த்த லாபம் இல்லை என்று மனம் கலங்க வேண்டாம். நஷ்டம் இல்லாமல் தொழில் செய்ய குரு பகவான் அருள் புரிவார். 

உத்தியோகஸ்தர்களுக்கு அதிர்ஷ்டத்தால் சில வாய்ப்புகள் கிடைக்கும். வெளியில் கொடுத்த பணம் சில அலைச்சல்களுக்குப் பின் கிடைக்கும். பெண்களுக்கு திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவர் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது உங்களுக்கு மன மகிழ்ச்சியைத் தரும்.

உங்களுக்கு 65% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும்.

- பணம் பரிவர்த்தனையில் கவனம் தேவை.

பரிகாரம்: விநாயகர் அகவல் சொல்லி விநாயகரை வணங்கி பதினொரு முறை வலம் வரவும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்ரன்

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள்

எண்கள்: 3, 5, 6

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close