[X] Close

குருப்பெயர்ச்சி : உத்திராடத்துக்கான பலன்கள்!


gurupeyarchi-uthiradam

  • kamadenu
  • Posted: 01 Oct, 2018 20:26 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

உத்திராடம்:

கிரகநிலை:   

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் இருபத்தி மூன்றாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

சூர்ய பகவானை  நட்சத்திர நாயகனாகக் கொண்ட உத்திராட நட்சத்திர அன்பர்களே!

இப்போதைய குரு பகவான் மாற்றத்தால் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடையப் போகிறீர்கள். சிலருக்கு நல்ல வேலை மாற்றம்,தொழில் மாற்றம் வரப் போகிறது. குடும்பத்தில் இவ்வளவு காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்தவர்களுக்கு இப்போது முன்னேற்றம் உண்டாகும்.

தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சூடு பிடிக்கும். லாபமடைவீர்கள். வீண் அலைச்சல் இருந்து கொண்டே இருந்த நிலை மாறும். வர வேண்டிய பணம் வந்து சேரும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலை இடத்தில் ஏற்பட்டு வந்த சில தொடர் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். வேலையை விட்டவர்களும் இப்போது தொடருவார்கள். பெண்களுக்கு புத்திர பாக்கியம் மற்றும் திருமணத்தில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டும் என்று இருந்த ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

உங்களுக்கு 60% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ பணவரத்து திருப்தி தரும்

- திடீரென்று கோபம் வரும்

பரிகாரம்: முன்னோர் வழிபாடு செய்வது நல்லது. குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவதும் நல்லது.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், குரு

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close