[X] Close

குருப்பெயர்ச்சி : பூராடத்துக்கான பலன்கள்!


gurupeyarchi-2018-pooradam

  • kamadenu
  • Posted: 01 Oct, 2018 14:19 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பூராடம்       :

கிரகநிலை:

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் இருபத்தி நான்காவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்த்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

சுக்கிர பகவானை  நட்சத்திர நாயகனாகக் கொண்ட பூராட நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சி எதையும் யோசனையுடன் செயல்படுவதற்கு அறிவுறுத்தும். நல்ல புத்திக் கூர்மை ஏற்படுவதற்கு குருபகவான் வழிவகை செய்வார். குடும்பத்தில் பழைய கடன்கள் அடைக்கப் பெறுவீர்கள். எதிரிகளின் தொல்லை அறவே நீங்கும், அவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.

உங்கள் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தொழிலுக்குத் தேவையான நிதி உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். உங்கள் உடல்நிலையால் சில காரியங்களைத் தள்ளிப்போட்டு வந்த நிலை மாறி சுறுசுறுப்புடன் செயல்பட்டு அனைத்து காரியங்களையும் செய்வீர்கள்.

வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழிலாளர்கள் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உடல் ஆரோக்கியக் குறைவு அல்லது சில பிரச்சினைகளால் வேலைக்குச் செல்லாமல் இருந்தவர்கள் இப்போது வேலைக்குச் செல்வார்கள்.

பெண்களுக்கு, உங்களை அவமதித்தவர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். மன்னிப்பும் கேட்பார்கள். ஓய்வில்லாமல் உழைக்க நேரிடலாம்.

உங்களுக்கு 60% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும்.

- எதிர்பாராத தடங்கல்கள் வரலாம்

பரிகாரம்: குடும்பத்தில் அமைதி உண்டாக தியானம், யோகா போன்றவற்றை செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சுக்கிரன், குரு

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை

எண்கள்: 6, 9

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close