[X] Close

குருப்பெயர்ச்சி : மூல நட்சத்திரத்துக்கான பலன்கள்!


gurupeyarchi-2018-moolam

  • kamadenu
  • Posted: 01 Oct, 2018 13:16 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மூலம்:

கிரகநிலை:   

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் இருபத்தி ஐந்தாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்த்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

கேது பகவானை  நட்சத்திர நாயகனாகக் கொண்ட மூல  நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சுப விரயங்களைத்தான் ஏற்படுத்தும். புதிய வீடு கட்டி குடி பெயருவீர்கள். இல்லத்தில் சுப நிகழ்வுகள் அதிகமாக நடைபெறும். குடும்பம் அமைதியாகவும், நிம்மதியாகவும் இருக்கும். தந்தையாரின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். தந்தை வழி சொத்துகளில் இருந்து வந்த பிரச்சினைகள் மட்டும் அவ்வப்போது வந்துபோகும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு உறவினர் ஒருவர் வீட்டுக்கு வருவார். தொழிலில் இருந்து வந்த தடைகள் அகலும். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான லாபத்தை குரு பகவான் வாரி வழங்கி விடுவார்.

 புதுத் தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். வாகனப் பழுதுகள் வரலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி சாதகமாகவே இருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். உடன் பணிபுரிபவர்களுடன் இருந்து வந்த மன வருத்தங்கள் அகலும்.

பெண்களுக்கு சோம்பல் குறையும். உடலில் இருந்து வந்த சில குறைபாடுகளும் அகலும். அதனால் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

உங்களுக்கு 60% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ கடன்கள் பைசலாகும்.

- வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

பரிகாரம்: குருவாயூர் சென்று குருவாயூரப்பனை தரிசித்து வாருங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், குரு

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 3, 6, 9

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close