[X] Close

குருப்பெயர்ச்சி : கேட்டை நட்சத்திரத்துக்கான பலன்கள்!


gurupeyarchi-2018-kettai

  • kamadenu
  • Posted: 01 Oct, 2018 12:51 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கேட்டை:

கிரகநிலை:   

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் இருபத்தி ஆறாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

புதன் பகவானை நட்சத்திர நாயகனாகக் கொண்ட கேட்டை நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு எல்லாவித வளங்களையும் பெற குருபகவான் அருள் செய்கிறார். வாழ்வில் முக்கியமான கட்டங்களை தெரிந்து கொள்வீர்கள். குடும்பத்திலிருப்பவர்கள் அனைவரும் உங்கள்  பேச்சுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது அதற்கான பாக்கியம் கிட்டும். வாழ்வில் அவரவர் வயதிற்கு ஏற்ப நன்மைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் இல்லை என்றாலும் நஷ்டமும் இருக்காது. நம்பிக்கையானவர்களை உடன் வைத்துக் கொள்வது உங்களையும் உங்கள் தொழிலையும் காப்பாற்றும். ஏற்றுமதி – இறக்குமதி தொழில் சிறப்பாக நடைபெறும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைப்பதற்காக அதிகமான வேலைப்பளுவை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். தந்தையாரின் அன்பு அதிகரிக்கும்.

உங்களுக்கு 75% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்

- காரியத் தடை, தாமதம் ஏற்படும்

பரிகாரம்: கந்தர் சஷ்டி கவசம் சொல்லி முருகப் பெருமானை வழிபடுங்கள். ஏழை எளியோருக்கு உதவுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன், குரு, சுக்கிரன்

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பச்சை, வெள்ளை

எண்கள்: 5, 6

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close