[X] Close

குருப்பெயர்ச்சி : அனுஷத்துக்கான பலன்கள்!


gurupeyarchi-2018-anusham

  • kamadenu
  • Posted: 01 Oct, 2018 12:03 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அனுஷம்:

கிரகநிலை:   

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் இருபத்தி ஏழாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

சனி பகவானை  நட்சத்திர நாயகனாகக் கொண்ட அனுஷ நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்வில் சந்தோஷமும், முன்னேற்றமும் அடையப் போகிறீர்கள். சிலர் வாழ்வில் முக்கிய கட்டங்களை சந்திக்கப் போகிறீர்கள். குடும்பத்தில் தந்தை வழியே வர வேண்டிய சொத்துகள், பிதுர் ராஜ்ஜிய சொத்துகளிலிருந்த பாகப் பிரிவினைகள் போன்றவை எந்த பிரச்சினையின்றி தீரும். வழக்குகள் ஏதாவது நடைபெற்றுக் கொண்டிருக்குமாயின் அது இந்த குருப்பெயர்ச்சிக்கு பிறகு உங்களுக்கு சாதகமான தீர்ப்புகளாக அமையும்.

அதுவரை பொறுமையாக இருந்து அனைவரின் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். தொழில் செய்பவர்கள் சில முக்கிய முடிவுகளை தந்தையின் ஆலோசனையின்படி கேட்டு முடிவு எடுப்பது உங்களுக்கு நன்மையைத் தரும். வீண் செலவுகளைத் தவிருங்கள். உத்தியோகஸ்தர்களில் வெளிநாடுகளுக்குச் செல்ல நினைக்கும் அன்பர்கள் இப்போது அதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள். சக நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு பெற்றோர் வகையில் ஆதாயம் உண்டு. கணவரிடம் அன்யோன்யம் அதிகரிக்கும்.

உங்களுக்கு 80% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ எதிர்ப்புகள் விலகும்

- நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும்

பரிகாரம்: நவகிரகங்களை வழிபட்டு ஒன்பது முறை வலம் வர இன்னல்கள் மறையும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், குரு

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3, 9

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close