[X] Close

குருப்பெயர்ச்சி : விசாகத்துக்கான பலன்கள்!


gurupeyarchi-2018-visakam

  • kamadenu
  • Posted: 01 Oct, 2018 11:15 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விசாகம்      :

கிரகநிலை:

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின்   உங்கள் நட்சத்திரத்தின் 3ம் பாதத்த்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

குரு பகவானை நட்சத்திர நாயகனாகக் கொண்ட விசாக நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சியால் பலவித நன்மைகள் உங்கள் வாழ்வில் நடக்கப் போகிறது. உத்தியோகம் தொடர்பான பிரச்சினைகள் அகலும். குடும்பத்தைப் பொருத்தவரை கணவன் - மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் விலகி இன்பமாக வாழ வழிபிறக்கும்.

இளைய சகோதரர்களிடையே இருந்த சண்டைகள், பிளவுகள் காணாமல் போகும். நீண்டநாட்களாக வர இருந்த பணம் இப்போது வரலாம். தாயாரின் அன்பு அதிகரிக்கும். தொழிலைப் பொருத்தவரை சற்று மந்தநிலை காணப்பட்டாலும் சில வெற்றிகள் உண்டாகும். தந்தையார் தொழிலை கவனித்து வரும் அன்பர்களுக்கு நல்ல லாபம் உண்டாக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வீண் பிரச்சினைகள் வந்து போகும். நம்பிக்கையாக யாரிடமும் எதையும் சொல்ல வேண்டாம். வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் சென்றுவர  வேண்டியிருக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து வரன்கள் அமையப் பெறுவீர்கள். வேலைக்குச் செல்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி வரலாம்.

உங்களுக்கு 80% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ செயல் திறன் அதிகரிக்கும்

- குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும்

பரிகாரம்: குருபகவானுக்கு முல்லை மலர் சார்த்தி வழிபட மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், குரு

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வியாழன் - வெள்ளி

திசைகள்: மேற்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம்

எண்கள்: 2, 6, 9

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close