[X] Close

குருப்பெயர்ச்சி: சுவாதி நட்சத்திரத்துக்கான பலன்கள்!


gurupeyarchi-2018-swathi

  • kamadenu
  • Posted: 01 Oct, 2018 10:42 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சுவாதி:

கிரகநிலை:   

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் இரண்டாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்த்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

ராகு பகவானை  நட்சத்திர நாயகனாகக் கொண்ட சுவாதி நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப் பெயர்ச்சியானது உங்களுக்கு பலவிதமான லாபத்தை அள்ளித்தரப் போகிறது. அதற்கு உங்கள் முயற்சியை மேலும் இரட்டிப்பாக்குங்கள். குருபகவான் உங்களுக்கு நன்மையை அளிப்பார். குடும்பத்தில் தூரதேசத்திலிருந்து வரும் செய்திகளால் மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும்.

தாயின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தினால் சிறு உடல் உபாதைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளின் வளர்ச்சி பற்றி அவ்வப்போது கவலை வந்து போகும். கணவன் – மனைவி அன்பு அதிகரிக்கும். தொழில் செய்து கொண்டிருந்தவர் களுக்கும், புதிதாக தொழில் தொடங்குவதற்கும் பண உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பண விஷயத்தைப் பொருத்த வரை கவலை வேண்டாம். அலுவலகத்தில் உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். உங்கள் சேமிப்பும் அதிகரிக்கும். பெண்களுக்கு, குடும்பத்தில் இருந்த பணப்பிரச்சினைகள் குறையும்.

 

+ காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்

- அலைச்சல் உண்டாகலாம்

பரிகாரம்:  பெருமாள் கோயிலுக்குச் சென்று ஸ்ரீநரசிம்மரை வழிபட்டு நெய் தீபம் ஏற்றுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: குரு, சுக்கிரன்

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி

திசைகள்: வடக்கு, மேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை

எண்கள்: 2, 5, 6

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close