[X] Close

குருப்பெயர்ச்சி: சித்திரைக்கான பலன்கள்!


gurupeyarchi-2018-chitthirai

  • kamadenu
  • Posted: 01 Oct, 2018 10:06 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சித்திரை:

கிரகநிலை:   

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் மூன்றாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்த்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

செவ்வாய் பகவானை  நட்சத்திர நாயகனாகக் கொண்ட சித்திரை அன்பர்களே!

இந்த குருப் பெயர்ச்சியானது தொழிலில் ஏற்பட்ட தடங்கல்களை தகர்க்க அடிகோலாக அமையும். சில சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகுங்கள். குடும்பத்தில் உங்கள் வாழ்க்கைத்துணை உங்களைப் புரிந்து நடந்து கொள்வார்.

தாய்வழி உறவினர்களிடையே இருந்த பிரச்சினைகள் அகலும். வீடு, வாகனம் வாங்கும் போது குடும்பத்தாருடன் ஆலோசித்து பின்பு முடிவெடுக்கவும்.. குடும்பத்துடன் சேர்ந்து சில ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தொழிலைப் பெருக்குவதற்கான நிதி வசதிகள் நிதி நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப் பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் அதிகரிக்கும். லாபம் பெறுவதில் இருந்த தடைகள் மறைந்து நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் நீங்களே முன் சென்று என்னால் செய்ய முடியும் என்று உறுதி கொடுக்காதீர்கள். உங்களுக்கென்று கொடுக்கும் வேலையைச் சரியாகச் செய்தாலே நலம்.

உங்களுக்கு 70% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ சமயோசித புத்தி அதிகரிக்கும்

- சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம்

பரிகாரம்: திருச்செந்தூர் சென்று செந்தில் வேலவனை தரிசித்து வாருங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், புதன், சுக்கிரன்

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி

திசைகள்: மேற்கு, வடக்கு

நிறங்கள்: வெள்ளை

எண்கள்: 2, 5, 6

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close