[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 30 Sep, 2018 08:41 am
  • அ+ அ-

மேஷம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளைப் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். உறவினர்கள் உதவுவார்கள்.

ரிஷபம்: எதையோ இழந்ததைப்போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உடன்பிறந்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். அநாவசியப் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். மற்றவர்களுக்கான பணம் கொடுக்கல் வாங்கலில் தலையிடாதீர்கள்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

சிம்மம்: தவறு செய்பவர்களைத் துணிவுடன் தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் திடீரென பாசமழை பொழிவார்கள். கைமாற்றாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள்.

கன்னி: நீண்ட நாட்களாகத் தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். சொந்தபந்தங்கள் வீடு தேடி வருவார்கள். பழைய பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்ப்பீர்கள். வாகன வசதி பெருகும்.

துலாம்: புது முதலீடுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். வரவேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். வெளி உணவுகளைத் தவிருங்கள்.

விருச்சிகம்: குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகை உண்டு.

தனுசு: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எல்லோரும் அதிசயிக்கும்படி பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள்.

மகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

கும்பம்: நண்பர்கள் உதவுவார்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும்.

மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. தந்தைவழி உறவினர்கள் பாராட்டுவார்கள். பயணம் சிறப்பாக அமையும்.

 

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close