[X] Close

குருப்பெயர்ச்சி : ஹஸ்தத்துக்கான பலன்கள்


gurupeyarchi-hastham

  • kamadenu
  • Posted: 29 Sep, 2018 22:04 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ஹஸ்தம்:

கிரகநிலை:   

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் நான்காவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

சந்திரனை நட்சத்திர நாயகனாகக் கொண்ட ஹஸ்த  நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப் பெயர்ச்சியால் பொதுவாக நிம்மதி கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் சில ஆதாயங்களையும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள், கணவன் - மனைவியிடையே சரியான புரிதல் இல்லாமை போன்ற பிரச்சினைகளை சந்தித்து வருகிறீர்கள். இவை அனைத்தும் இந்த குருப் பெயர்ச்சிக்குப் பிறகு மாறும்.

உங்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட அவமானங்கள் மாறும். மனதில் நிம்மதி பிறக்கும். இதனால் நிம்மதியான தூக்கம் வரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் ஏற்பட்டிருந்த தொய்வுகள் அகலும். நிறைய போராட்டத்திற்கு பிறகு நல்ல செய்திகள் தொழிலில் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் கவனமாகப் பழகவும். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் போது கவனம் அவசியம். பெண்களைப் பொருத்தவரை வேலை செய்யும் பெண்கள் லாபமடைவார்கள்.

உங்களுக்கு 65% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ பொறுப்புகள் அதிகரிக்கும்

- பேச்சில் நிதானம் அவசியம்

பரிகாரம்:

காமாட்சி அம்மனை வழிபட முன்னேற்றம் உண்டு.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், புதன், சுக்கிரன்

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 1, 3, 9

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close