[X] Close

குருப்பெயர்ச்சி : உத்திர நட்சத்திரத்துக்கான பலன்கள்


gurupeyarchi-utthiram

  • kamadenu
  • Posted: 29 Sep, 2018 21:52 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

உத்திரம்:

கிரகநிலை:   

04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் ஐந்தாவது நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் 3ம் பாதத்த்தில் இருந்து 4ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்:

சூர்ய பகவானை நட்சத்திர நாயகனாகக் கொண்ட உத்திர நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப் பெயர்ச்சியால் நல்ல சுமூகமான வாழ்க்கையை வாழப் போகிறீர்கள். சுபச் செய்திகள் வரும். உண்மையான உறவுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களை உங்கள் அருகில் வைத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் சுமூகமான உறவு இருக்கும். இதனால் உங்களுக்குள் தன்னம்பிக்கை பிறக்கும். இவை அனைத்தையும் நல்ல முறையில் பயன்படுத்துங்கள்.

தொழில் செய்பவர்களுக்கு சில சவாலான சூழ்நிலைகள் அமையும். ஆனாலும் குருபகவானின் துணையால் அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். இதனால் உங்கள் புகழ் மட்டுமின்றி தொழிலும் லாபத்தை நோக்கி உயரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வரவேண்டிய பணம் வந்து சேரும். வேலையில் இருந்து இடையே நின்றவர்கள் மீண்டும் தொடருவார்கள். பெண்களில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பயணத்தின் போது கவனமாக இருப்பது அவசியம். சோம்பல் நீங்கும்.

உங்களுக்கு 65% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ மதிப்பு அதிகரிக்கும்

- உடற்சோர்வு ஏற்படும்

பரிகாரம்: பழைய, புராதனமான கோயில்களுக்குத் தீபமேற்ற எண்ணெய் வாங்கிக் கொடுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், புதன்

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி;

திசைகள்: வடக்கு, வடமேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close